» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரூர் அரசுப்பணி உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
வியாழன் 30, ஜூலை 2026 12:44:40 PM (IST)
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணைகளை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 10-ஆம் தேதி கரூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
எனினும், தமிழக அரசால் வழங்கப்பட்ட இந்த அரசுப் பணி ஆணைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, அந்தப் பணி நியமன உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த விவகாரம் குறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று தமிழ்நாடு சட்டத்துறை சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
அதன்படி, கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 29) உச்ச நீதிமன்றத்தில் முறைப்படி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








