» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க இளையராஜா அழைப்பு!
புதன் 29, ஜூலை 2026 12:18:38 PM (IST)

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்த பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இசைஞானி இளையராஜா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமாக இணையதளம் வழியாகச் சுய கணக்கெடுப்பு (Self-Enumeration) செய்யும் பணி கடந்த ஜூலை 17-ஆம் தேதி தமிழ்நாட்டில் தொடங்கியது.
இதனையொட்டித் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது குடும்ப விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து, பொதுமக்களையும் சுய கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தங்களது தரவுகளை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்த பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இசைஞானி இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சுயக் கணக்கெடுப்பு முறை 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெறுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் பொதுமக்கள் https://se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது குடும்ப விவரங்களைச் சுயமாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதனைத் தொடர்ந்து 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் (HLO) கட்டத்தில் நேரில் வருகை தரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
துல்லியமான மக்கள்தொகைத் தகவல்கள் நாட்டின் சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகின்றன. அனைவரும் இணைந்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம்." இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








