» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

புதன் 29, ஜூலை 2026 10:52:23 AM (IST)

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் ரூ. 3,600 கோடி வருவாய் இழப்பு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தற்போது 4,048 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் கட்சி நிதி என்ற பெயரில் முறைசாரா வழிகளில் மாதம் தோறும் சுமார் ரூ. 102 கோடி திசை திருப்பப்பட்டதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ. 3,600 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டது.

இது குறித்து மூத்த அரசு அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யிடம் தெரிவித்த நிலையில், டாஸ்மாக் வருவாயில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர உத்தரவிடப்பட்டது. மேலும், காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் முறையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு அண்மையில் மூடியது. டாஸ்மாக் சில்லறை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் அமைப்புகளைக் கலைக்கவும், ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை உறுதி செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் பகுதியாகத் தமிழகம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஈரோடு, கோவை (பீளமேடு), பொள்ளாச்சி, நரசிம்மநாயக்கன்பாளையம், நவகரை ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும், மேட்டுப்பாளையம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள 'சிவாஸ்' மதுபான தயாரிப்பு ஆலை மற்றும் மன்னார்குடியில் உள்ள டி.ஆர். பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory