» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமணமான 5 மாதங்களில் கொடூரம்: புதுப்பெண் வெட்டிக்கொலை - கணவர் நீதிமன்றத்தில் சரண்!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:28:34 AM (IST)
தென்காசியில் திருமணமான 5 மாதங்களிலேயே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, புதுப்பெண்ணைக் கணவரே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மங்கம்மாள் சாலையில் உள்ள சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி வீரமணிகண்டன் (33). இவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அன்னலட்சுமி என்ற அபி (23). இத்தம்பதியினருக்குக் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமான முதல் வாரத்திலிருந்தே தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அன்னலட்சுமி, தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சக்தி வீரமணிகண்டனை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இருப்பினும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த சக்தி வீரமணிகண்டன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அன்னலட்சுமியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் உடலில் 6 இடங்களில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் அன்னலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த தென்காசி காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று, அன்னலட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற சக்தி வீரமணிகண்டன், காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்குப் பயந்து தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் சென்று சரணடைந்தார்.
இக்கொடூரக் கொலை குறித்து அன்னலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தென்காசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரணடைந்த சக்தி வீரமணிகண்டனைக் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








