» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 27, ஜூலை 2026 4:44:50 PM (IST)

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு உடனடியாகத் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகவும், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற ஆணையராகச் செயல்பட்டு, மதுரையில் நடைபெற்ற மாபெரும் கிரானைட் குவாரி ஊழலை வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு விலக்கப்பட்டதால் மனு:
கிரானைட் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு கோரி அவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு விசாரணைக்கு வந்தபோது, "எவ்வித முன்அறிவிப்பும் இன்றித் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது" எனச் சகாயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், "பாதுகாப்பு கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பம், அதுதொடர்பான மறுஆய்வுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது" எனத் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டு, வழக்கினை முடித்து வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாட்டரி நிறுவனத்திடம் ரூ.900 கோடி வாங்கியது ஏன்?: ஆதவ் - உதயநிதி இடையே காரசார விவாதம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:40:48 PM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா - வழக்கு முடித்து வைப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:07:34 PM (IST)

தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்க கோரி மனு: அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:57:25 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)








