» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்குப் பழங்குடியினர் நிதி மடைமாற்றம்: டிடிவி தினகரன் கண்டனம்!
வியாழன் 23, ஜூலை 2026 5:13:34 PM (IST)
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யப் பழங்குடியினர் முன்னேற்ற நிதியிலிருந்து ₹6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவது சமூக அநீதி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காகப் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் ₹343.55 கோடி செலவிட நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்ட விரிவாக்கத்திற்காகப் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் ₹6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்குக் கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றம் செய்வது அவர்களின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தும் செயலாகும்.
காலை உணவுத் திட்டம் மிக முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 19.34 லட்சம் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெற்று வந்த இக்காலை உணவுத் திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான 12.87 லட்சம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் நிலைப்பாடு என்ன? – சீமான் கேள்வி!
வெள்ளி 24, ஜூலை 2026 5:47:01 PM (IST)

நாங்குநேரி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:17:33 PM (IST)

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்!
வெள்ளி 24, ஜூலை 2026 12:31:08 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)








