» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு கோடை பருவம் 2026-இல் பயிர் செய்யப்பட்டு அறுவடையாகும் நெல்லினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு 11 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்திட சிறப்பு கண்காணிப்புக் குழு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எழும் குறைபாடுகளை நீக்கி, சிறப்பாக செயல்படுவதற்கு ஏதுவாக வருவாய்த் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், வேளாண்மைத் துறை சார்ந்த அலுவலர்கள் கொண்ட சிறப்பு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எழும் புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருநெல்வேலி -94420 25935, வேளாண்மை அலுவலர் - 95430 13223 வாட்ஸ்அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.
நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 3540 மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய துறை உயர் அலுவலர்களின் அலைபேசி எண்கள் கொண்ட அறிவிப்பு பதாகையும் புகார் பெட்டியும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் பணி நிறைவடையும் வரை, வாரத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும், குழு ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்திடவும் கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொள்முதல் தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் சிறைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு!
புதன் 22, ஜூலை 2026 11:42:19 AM (IST)

நாடெங்கும் மாணவர்கள் போராட்டம் தீவிரம்: நீட் தேர்வு ஒழிப்பே தீர்வு - மு.க.ஸ்டாலின் அறிக்கை!
புதன் 22, ஜூலை 2026 11:05:20 AM (IST)

குடும்பத் தகராறில் கொடூரம்: 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் சடலங்களாக மீட்பு: போலீஸ் விசாரணை!
புதன் 22, ஜூலை 2026 10:23:10 AM (IST)

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

தெருக்குரல் அறிவு கைது நடவடிக்கை: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:15:04 PM (IST)

தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 5-இல் தாக்கல் : சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:25:51 PM (IST)








