» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு

வெள்ளி 17, ஜூலை 2026 3:27:42 PM (IST)

AssemblyTn.jpg

விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகளுக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

முதலமைச்சர் விஜயின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெண்டர்களைக் கோரி அவற்றைச் சமர்ப்பிப்பதற்கு 1 முதல் 4 நாட்கள் வரை மட்டுமே குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விதிமீறல் புகார்களைத் தொடர்ந்து, நிர்வாகக் காரணங்களுக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வறிவிப்பின்படி உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்களும், கோத்தகிரி நகராட்சியில் 3 டெண்டர்களும், செங்கம் நகராட்சியில் 2 டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மணப்பாறை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவையாறு உள்ளிட்ட நகராட்சிகளில் 20-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த டெண்டர்கள் அனைத்தும் நகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட கழிவுநீர் வடிகால் பராமரிப்பு, குடிநீர் இணைப்புப் பணி, வாரச்சந்தை கடைகள் ஏலம் மற்றும் புதிய போர்வெல் அமைக்கும் பணிகள் தொடர்புடையவை ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory