» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி கைதி சபரிவர்மன் மரணமடைந்த விவகாரத்தில், அவரை முதன்முதலில் கைது செய்த தென் தாமரைக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் தென் தாமரைக்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை 13 ஆம் தேதி அவர் சிறையில் உயிரிழந்ததாக உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இது கொலை வழக்காக மாற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சத்தியமூர்த்தி மற்றும் குமரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சிறைக்குச் சென்று நேரடி விசாரணை நடத்தினர்.
சிறை விசாரணையின் அடிப்படையில், கைதியின் மரணத்திற்குப் பொறுப்பான சிறை முதன்மை வார்டர் திருமலை நம்பி, வார்டர்கள் ஜெகன் மற்றும் சிவகுமார் ஆகிய 3 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், இந்த ஒழுங்கு நடவடிக்கையைத் தொடர்ந்து 3 வார்டுகளும் சிறைத்துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்களுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்ட சிறைக்கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அரவிந்த், அஜித் ஆகிய 8 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சபரிவர்மனின் மரணத்திற்கு நீதி கோரியும், அவரது குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? – அன்புமணி கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 11:25:26 AM (IST)








