» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி

சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

cmvijayStalin.jpg

தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதல்வர் விஜய் எப்போது இது குறித்து மவுனம் கலைப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாகர்கோவில் சிறைக்​குள் சபரிவர்​மன் என்ற விசாரணைக் கைதி அடித்து கொல்​லப்​பட்டதாக எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் தூத்துக்குடியில் அருணாச்​சலம் எனும் விசா​ரணை சிறை​வாசி காவல்​ நிலை​யத்​தில் வைத்து அடித்து கொல்​லப்​பட்ட சம்பவம் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் "எதிர்க்கட்சியாக இருக்கும் போது, "Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதல்வரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? Accountability, Apology முதல்வருக்கு பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக தவெக அரசுக்கு வன்மையான கண்டனங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory