» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கடும் கண்டனம்!
சனி 2, மே 2026 3:27:51 PM (IST)
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மார்ச் மாதம் ரூ.144 ரூபாயும், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று மே 1ஆம் தேதி சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,239 ரூபாயாக விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க - ஈரான் போரால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி ஒன்றிய பாஜக அரசு வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை ஒரேடியாக சுமார் 1000 ரூபாய் அதிகரித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கடந்த இரண்டு மாதங்களாக சமையல் எரிவாயு வினியோகம் தடைப்பட்டதால் உணவகங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்ததுடன், உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். ஒன்றிய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பெற்றாலும் விஜய் வலிமை பெறவில்லை : திருமாவளவன் கருத்து!
சனி 2, மே 2026 5:19:09 PM (IST)

கோடை விடுமுறை எதிரொலி: நெல்லை, கோவை வந்தே பாரத் ரயில்களில் ஜூன் வரை இடமில்லை!
சனி 2, மே 2026 3:41:41 PM (IST)

தாம்பரம் - திருவனந்தபுரம் அமித் பாரத் ரயிலைத் தினசரி ரயிலாக இயக்க கோரிக்கை
சனி 2, மே 2026 12:34:24 PM (IST)

சங்கரன்கோவிலில் புத்தகத் திருவிழா தொடக்கம்: 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு - 10% தள்ளுபடி அறிவிப்பு!
சனி 2, மே 2026 12:12:30 PM (IST)

விஜய் வேளாங்கண்ணி வருகை திடீர் ரத்து : திருப்பலி தாமதம், தொண்டர்கள் ஏமாற்றம்!
சனி 2, மே 2026 11:58:31 AM (IST)

மே 11 முதல் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சனி 2, மே 2026 11:12:22 AM (IST)









