» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்களவையில் 3 மசோதாக்கள் தோல்வி: பட்டாசு வெடித்துக் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்!

சனி 18, ஏப்ரல் 2026 10:30:16 AM (IST)



மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பட்டாசு வெடித்துக் கொண்டாடித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, இத்தகைய முக்கிய மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம். அந்த வகையில், இம்மசோதா வெற்றி பெற 352 வாக்குகள் (வாக்களித்த 528 உறுப்பினர்களில் 2/3 பங்கு) தேவைப்பட்டது. ஆனால், தேவையான ஆதரவு கிடைக்காததால் மூன்று மசோதாக்களும் தோற்கடிக்கப்பட்டன.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:"தேர்தலுக்கு முன்பே என்டிஏ (NDA) மண்ணைக் கவ்வியது. தொகுதி மறுவரையறை எனும் கருப்புச் சட்டத்தை எதிர்த்துக் கருஞ்சட்டையோடு ஆண்டிப்பட்டியில் மேடையேறினேன். இப்போது வெற்றிச் செய்தி வந்ததும், மீண்டும் வெள்ளுடைக்கு மாறி, வெடியைப் போட்டுவிட்டு திண்டுக்கல் கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரிக்க மேடையேறினேன்."

மேலும், "தேனியும், திண்டுக்கல்லும் வழங்கும் திடமான வெற்றியோடு, மே 4-ஆம் தேதி ஏழாவது முறையாகக் கழகம் மீண்டும் ஆட்சிக்கட்டில் ஏறும்" என்றும் அவர் அந்தப் பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory