» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நள்ளிரவில் காய்கறி வியாபாரியின் ஆட்டோ எரிந்து சேதம் - போலீஸ் விசாரணை!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:25:27 AM (IST)

இரணியல் அருகே காய்கறி வியாபாரியின் லோடு ஆட்டோ நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள காரங்காடு அடுத்த செருப்பங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் மகன் ராஜேஷ் (31). இவர் செருப்பங்கோடு ஜங்ஷனில் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடையில் உள்ள காய்கறிகளை லோடு ஆட்டோவில் எடுத்துச் சென்று ஊர் ஊராக விற்பனை செய்வதும் உண்டு.
இந்த நிலையில் நேற்று ராஜேஷ் வியாபாரம் முடிந்து இரவு வழக்கம் போல ஆட்டோவை வீட்டின் அருகில் நிறுத்தி விட்டு தூங்கச் சென்று விட்டார். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் ஆட்டோ தீப்பிடித்து எரிவதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அவர்கள் சத்தம் போடவே அலறல் சத்தம் கேட்டு ராஜேஷ் பதறியடித்து வெளியே வந்துள்ளார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.
ஆனால் அதற்குள் ஆட்டோ முழுவதும் தீயில் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து ராஜேஷ் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது உறவினரான திக்கணங்கோடை சேர்ந்த வாலிபர் ஒருவரின் பெயரை தெரிவித்துள்ளார். தனது உறவினரான அந்த வாலிபர் மது போதையில் அடிக்கடி மிரட்டுவதும், ஆட்டோவை எரித்து விடுவேன் என கூறியும் வந்துள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.
அவரை பிடித்து விசாரிக்க போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகில் நிறுத்தியிருந்த லோடு ஆட்டோ உறவினராலேயே எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமதாஸ் மனு தள்ளுபடி: மாம்பழம் சின்னத்தை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:46:28 PM (IST)

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:14:47 PM (IST)

தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவு: நுண் பார்வையாளர்களுக்குத் பயிற்சி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:13:27 PM (IST)

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் போது கனிமொழி மவுனம் காப்பது ஏன்? - குஷ்பு கேள்வி
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:52:18 AM (IST)

ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை: வாக்குப்பதிவு அதிகரிப்பு குறித்து பாஜக வரவேற்பு!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:44:05 AM (IST)

கடலூரில் விஜய் நாளை பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:35:20 AM (IST)







