» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரண்பாடு? நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளதா?

வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:05:50 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்கள், தற்போது புதியதொரு விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே (மார்ச் 30) விஜய் இங்கு மனுத் தாக்கல் செய்தார். நேற்று (வியாழக்கிழமை) இத்தொகுதிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதற்காக ரூ.10,000 வைப்புத் தொகையைச் செலுத்தி உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார். இவருக்கு மாற்று வேட்பாளராகக் கு.ப. கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

விஜய் தாக்கல் செய்த இரண்டு தொகுதி மனுக்களிலும் குற்ற வழக்குகள் குறித்த தகவல்களில் முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது:இதில் தன் மீது எந்தவிதமான குற்ற வழக்குகளும் இல்லை என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆனால், திருச்சி கிழக்கு மனுவில் தன் மீது 2 வழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்று: மார்ச் 30-ஆம் தேதி பெரம்பூர் பிரசாரத்தின் போது பதியப்பட்ட வழக்கு.

இரண்டு: 2025 ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடந்த மாநாடு தொடர்பான வழக்கு.

நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளதா?

ஒரே வேட்பாளர், வெவ்வேறு தொகுதிகளில் தாக்கல் செய்யும் மனுக்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக நான்கு செட் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். விஜய் இதுவரை பெரம்பூரில் இரண்டு செட் மனுக்களை மட்டுமே தாக்கல் செய்துள்ளார். எனவே, மீதமுள்ள இரண்டு செட்களில், விடுபட்ட வழக்கு விவரங்களைச் சேர்த்துச் சரியான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதன் மூலம் இந்தப் பிழையைச் சரிசெய்ய முடியும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory