» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா: முதல்வர் உருக்கம்!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:18:33 PM (IST)
மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய கோவையை சேர்ந்த சிறுமி வெண்பாவின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள். பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மாந்தநேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறுப்புகளைக் கொடையளித்த பெற்றோர் சோமு மற்றும் சுகன்யா ஆகியோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்.
சோமு நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உடலுறுப்புகளைக் கொடையளிப்பது குறித்து நான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதேபோல், கொடையாளரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கடந்த 23-09-2023 அன்று அறிவித்திருந்தேன்.
இதனைத் தொடர்ந்து, தங்களது உடலுறுப்புகளைக் கொடையளிப்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மட்டுமல்ல; இந்திய மாநிலங்களிலேயே அதிகளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுவரையில், இறப்பிலும் பலருக்கு வாழ்வளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு வளரட்டும். இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் இந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள். பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மாந்தநேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறுப்புகளைக் கொடையளித்த பெற்றோர் சோமு மற்றும் சுகன்யா ஆகியோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்.சோமு நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உடலுறுப்புகளைக் கொடையளிப்பது குறித்து நான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதேபோல், கொடையாளரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கடந்த 23-09-2023 அன்று அறிவித்திருந்தேன்.
இதனைத் தொடர்ந்து, தங்களது உடலுறுப்புகளைக் கொடையளிப்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மட்டுமல்ல; இந்திய மாநிலங்களிலேயே அதிகளவுக்கு அதிகரித்து வருகிறது. இதுவரையில், இறப்பிலும் பலருக்கு வாழ்வளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு வளரட்டும். இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் இந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: தேர்தல் ஆணையக் குழு ஆய்வு நிறைவு!
சனி 28, பிப்ரவரி 2026 5:16:35 PM (IST)

அரசு பஸ்களில் மறைமுகமாகக் கட்டணம் உயர்வு? தமிழக அரசு விளக்கம்!
சனி 28, பிப்ரவரி 2026 5:10:59 PM (IST)

ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்த இரு மின்சார ரயில்கள்: தாம்பரம் அருகே பரபரப்பு!
சனி 28, பிப்ரவரி 2026 4:56:15 PM (IST)

பிரதமர் நாளை மதுரை வருகை: திருப்பரங்குன்றம் முதல் பொதுக்கூட்ட மைதானம் வரை ஐந்தடுக்கு பாதுகாப்பு!
சனி 28, பிப்ரவரி 2026 12:42:20 PM (IST)

மகளிருக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மற்றும் கடனுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 5:38:53 PM (IST)

பேருந்து நிலையத்துக்கு மபொசி பெயரை மாற்றி கருணாநிதி பெயரா? - சீமான் கண்டனம்
வெள்ளி 27, பிப்ரவரி 2026 5:08:54 PM (IST)










