» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இது எனக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான போர் : வேலூரில் விஜய் ஆவேசப் பேச்சு

திங்கள் 23, பிப்ரவரி 2026 3:41:57 PM (IST)



இது விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான போர்; இந்தத் தேர்தல் ஒரு 'விசில் புரட்சி' என்று வேலூர் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார். 

வேலூரில் இன்று நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் என்பது ஊழல், லஞ்ச நிர்வாகத்தைச் செய்யும் திமுக ஆட்சிக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான போர். இது குறிப்பாக விஜய்க்கும், மு.க. ஸ்டாலினுக்கும் இடையிலான நேரடிப் போட்டி. திமுக கூட்டணியை ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என்று விமர்சித்த அவர், அறிவாலயம் பக்கம் நிழலுக்கு ஒதுங்குபவர்களைக் கூட திமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாகக் கிண்டல் செய்தார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மின் கட்டண முறை மாற்றம் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். திமுகவை 'தீய சக்தி' என்றும், தவெகவை 'தூய சக்தி' என்றும் குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தல் ஒரு 'விசில் புரட்சி' எனத் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் உலகத்தரம் வாய்ந்த கழிப்பறை வசதிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளி பாடத்திட்டத்தில் அடிப்படை அரசியல் சாசன சட்டம் சேர்க்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் பதவிகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கப்படும். ஆட்டோ, டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கெனத் தனி நலவாரியம் அமைக்கப்படும்.

மலைக் கிராமங்களில் பிரசவ வசதியுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்துக் கிராமங்களுக்கும் பேருந்து வசதி உறுதி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். தமிழக அரசியல் களம் என்பது ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை போன்றது; அந்தக் காளையைத் துணிச்சலுடன் அடக்கும் சிறுவன்தான் தவெக என்று விஜய் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory