» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாத்தாவை விமர்சிக்கத் துணிவில்லாத கத்துக்குட்டி உதயநிதி! - எடப்பாடி பழனிசாமி சரமாரித் தாக்கு!

திங்கள் 23, பிப்ரவரி 2026 12:05:01 PM (IST)

தாத்தாவை விமர்சிக்கத் துணிவில்லாத கத்துக்குட்டி உதயநிதி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கும் நிலையில், "பாஜகவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்" என்று உதயநிதி ஸ்டாலின் அண்மையில் விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதி பிரசாரப் புகைப்படங்களைப் பகிர்ந்து இபிஎஸ் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: "என்னை பாஜகவின் முரட்டு அடிமை என்று உதயநிதி சொல்கிறார் என்றால், முன்பு அதே கூட்டணியில் இருந்த தனது தாத்தாவைப் பார்த்து அவர் என்ன சொல்வார்? அவருக்கு என்ன பட்டம் கொடுப்பார்? தன் தாத்தா கருணாநிதியை நேரடியாக விமர்சிக்கத் துணிவில்லாமல், என் பெயரைக் குறிப்பிட்டுத் தனது தாத்தாவைப் பற்றிப் பேசுகிறாரா?"

மேலும், உதயநிதி ஸ்டாலினை 'அரசியல் கத்துக்குட்டி' என்று குறிப்பிட்ட அவர், பேசும் முன்பாக உண்மைகளைத் தெரிந்து பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தைக் கடுமையாகச் சாடிய இபிஎஸ், "இன்று உலகின் பெரும் பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாக ஸ்டாலின் குடும்பம் உருவெடுத்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆட்சி தமிழகத்திற்குத் தேவையா?" எனக் கேள்வி எழுப்பினார்.

வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில், தமிழக மக்கள் குடும்ப ஆட்சியையும், வாரிசு அரசியலையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவது உறுதி என எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory