» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரையில் ரூ.213 கோடி செலவில் புதிய மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சனி 21, பிப்ரவரி 2026 4:29:11 PM (IST)

மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தமுக்கம் முதல் நெல்பேட்டை வரையிலான புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பு வரை கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்திற்கு ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்’ என முதல்வர் பெயர் சூட்டியுள்ளார்.    நீளம்: சுமார் 2 கிலோமீட்டர்.  61 தூண்கள் மற்றும் 62 அடுக்குகளுடன் (Spans) பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ரூ.213 கோடி செலவில் பொதுப்பணித்துறையினரால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தமுக்கம் பகுதியில் ஏறுதளமும், நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்குதளமும் அமையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பெரிதும் உதவும். மேம்பாலத்தைத் திறந்து வைத்த கையோடு, சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளையும் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory