» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏப்ரலில் தேர்தல்? பிப். 25 முதல் 27 வரை தேர்தல் ஆணையக் குழு புதுச்சேரி, தமிழகத்தில் ஆய்வு

சனி 21, பிப்ரவரி 2026 10:20:59 AM (IST)

சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் பிப்ரவரி 25 முதல் 27-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கும் வரும் ஏப்ரல் மாதத்தில் பல்வேறு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான தேர்தல் தேதிகள் மார்ச் மாத பாதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் அடங்கிய குழு, பிப். 25 முதல் 27 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த உள்ளனர். இந்தப் பயணத்தின்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனும் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, அஸ்ஸாம் மாநிலத்திற்குச் சென்று ஆய்வு செய்த தலைமைத் தேர்தல் ஆணையர், "ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பிஹு திருவிழாவைக் கருத்தில் கொண்டு அஸ்ஸாம் மாநிலத்திற்கான தேர்தல் தேதி இறுதி செய்யப்படும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடையும் தேதிகள்:

மேற்கு வங்கம்: மே 7

தமிழகம்: மே 10

அஸ்ஸாம்: மே 20

கேரளம்: மே 23

புதுச்சேரி: ஜூன் 15

இதனை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பின், கடந்த 14-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அஸ்ஸாம்: கடந்த 10-ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

கேரளம்: இன்று (பிப். 21, சனிக்கிழமை) இறுதிப் பட்டியல் வெளியாகிறது.

தமிழகம்: வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

மேற்கு வங்கம்: பிப்ரவரி 28-ஆம் தேதி பட்டியல் வெளியிடப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory