» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திரிஷாகிட்ட இருந்து விஜய் வெளியே வரணும்: நயினார் நாகேந்திரன் விமர்சனம் - திமுக கண்டனம்

சனி 14, பிப்ரவரி 2026 12:42:15 PM (IST)



தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்,  சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை திருச்சி புறப்பட்டார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை, மத்திய அரசு முடக்குவதாக கூறுவது பொய். கரூரில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தனர். இன்று சேலத்தில் நடந்த அதே கட்சியின், மக்கள் சந்திப்பு கூட்டத்தில், ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும். அப்போதுதான் எல்லாம் நடக்கும். குடும்பங்களோடு நல்ல உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கங்கள் பற்றி நல்ல முறையில் பேச வேண்டும். முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர் விஜய். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? ஒரு காலமும் முடியாது.

இதுதான் விஜய்க்கான பதில். விஜய் தனக்கு 32 சதவீதம் வாக்கு இருக்கிறது என எப்படி கூற முடியும்? அவர் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். விஜய் எல்லாம், எனக்கு ஒரு ஆளே கிடையாது. கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா? இவருக்கு கூடி விட்டது. நானும் அனுமான் போல், மலையை தூக்கிக் கொண்டு செல்ல முடியும் என கூறலாம். ஆனால் அதை செய்ய முடியுமா? விஜய்யால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

தவெக தலைவர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் அநாகரிக விமர்சனத்திற்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல. பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory