» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு

வியாழன் 12, பிப்ரவரி 2026 12:25:19 PM (IST)



தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "1967-இல் முதன்மை எதிர்க்கட்சியாக இருந்த ராஜாஜியும், தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பதற்காக வியூகம் வகுத்துக் கூட்டணி அமைத்தார்கள். கொள்கைக் கூட்டணி என்பது வேறு, தேர்தல் கூட்டணி என்பது வேறு. தேர்தல் அரசியலில் வியூகம் முக்கியம்.

த.வெ.க. தலைவர் விஜய் வாக்குச் சதவீதத்தை மட்டுமே நிரூபிக்கத் தேர்தலுக்கு வந்தால் அது அவர் விருப்பம். ஆனால், தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கும்போது, அதே நோக்கத்துடன் இருக்கும் கூட்டணியில் இணைவதுதான் சரியானது.

தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வுக்கு 15 சதவீத வாக்குகள் கிடைத்தால் போதுமா? சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்காமல் விஜய் 15 சதவீதம் எடுத்தாலும் அது பூஜ்ஜியம்தான். தி.மு.க.வை வீழ்த்த விஜய்யின் வியூகம் என்ன? தனியாக நின்றால் விஜய்யால் தி.மு.க.வை வீழ்த்த முடியுமா? கூட்டாகச் சேர்ந்தால்தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும். தனித்து நின்று வாக்குச் சேகரிப்பதால் என்ன பயன்?

எதிர்க்கட்சியின் வாக்குகள் சிதறிப்போய்விட்டால் தி.மு.க.வைத் தோற்கடிக்க முடியுமா? எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கக் கூடாது. தி.மு.க.வை வீழ்த்தக் கூட்டணி உறுதியாக இருக்க வேண்டும். தி.மு.க.வை வீழ்த்த பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory