» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ மோதிய கோர விபத்தில், ஆட்டோவில் பயணித்த தாய் மற்றும் மகன் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இன்று அதிவேகமாக வந்த காரும், ஆட்டோவும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. ஆட்டோவில் பயணம் செய்த வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வரும் போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைபாஸ் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாடா ஆலையில் தயாரான முதல் கார் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:40:59 PM (IST)

அன்புமணிதான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்: தலைமை தேர்தல் ஆணையம்..!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:27:33 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

கொடிக் கம்பங்கள் வழக்கு: தூத்துக்குடி, நெல்லை உட்பட 13 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:48:37 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டம்: தொடக்கி வைத்த முதல்வர்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:21:53 AM (IST)









