» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!

திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)



விளவங்கோடு அருகே வேன் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம்  திருவட்டார், மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்த திபின் பென்சிகர் (20) என்பவர், இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் சிதறால் கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட திபின் பென்சிகர், பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அருமனை காவல் நிலைய போலீசார், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வேன் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory