» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு: பாஜகவினர் 23 பேர் கைது!

வெள்ளி 6, பிப்ரவரி 2026 11:51:28 AM (IST)



கோவையில் மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கிழித்ததாக பாஜகவைச் சேர்ந்த 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்க வில்லை எனக்கூறி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பாஜக-அதிமுக தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதி முட்டை என்றும், ‘பட்ஜெட் 2026 ஒரு பூஜ்யம்’ என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக சிங்காநல்லூர், கணபதி பகுதிகளில் அதிக அளவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களை பாஜக இளைஞரணியை சேர்ந்த சிலர் கிழித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சுவரொட்டிகளைக் கிழித்த பாஜகவினரைக் கைது செய்தனர். சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 14 பேர், சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 9 பேர் என 23 பேர் கைது செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory