» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 6, பிப்ரவரி 2026 10:57:36 AM (IST)



வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் விஜய் 2016-2017 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்தாா். அதில், அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35.42 கோடி ஈட்டியதாக குறிப்பிட்டிருந்தாா். அந்த வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் மதிப்பீடு செய்தபோது, 2015-ஆம் ஆண்டில் நடிகா் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன், இந்த வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் ஒப்பிட்டுப் பாா்த்தனா். அப்போது ’புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்ற ரூ.15 கோடி வருமானம் கணக்கில் காட்டப்படாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை 2022-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து 2022-ஆம் ஆண்டு விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ”வருமான வரிச் சட்டத்தின் 263-வது பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தான் வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்டதில் எந்த குறைபாடும் இல்லை” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory