» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை : மக்கள் மகிழ்ச்சி!

திங்கள் 15, ஏப்ரல் 2024 3:15:17 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மழையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணை பகுதிகளிலும், மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் தேயிலை தோட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் அதிகபட்சமாக 2.6 சென்டி மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 1.9 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 1.8 சென்டிமீட்டரும், ஊத்தில் 5 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அணை பகுதிகளிலும் இன்றும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 3.60 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. 

நெல்லை மாநகர பகுதி முழுவதும் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory