» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி, விளவங்கோடு தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களை ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு

வியாழன் 11, ஏப்ரல் 2024 5:19:32 PM (IST)



கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையங்களை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் முன்னிலையில் இன்று (11.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் "கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. 39 கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆறு சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்படும். 

மேலும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தனி வைப்பறையில் வைக்கப்படும். அதற்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோணம் பொறியியல் கல்லூரியின் கீழ் தளத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும், முதல் தளத்தில் குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும், இரண்டாம் தளத்தில் விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமும் அமைக்கப்படவுள்ளது. 

அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறை அமைக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார். ஆய்வுகளில் உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தூர் ராஜன், தேர்தல் வட்டாட்சியர் வினோத், உதவி செயற்பொறியாளர் பொதுபணித்துறை (கட்டடம்), துணை தேர்தல் வட்டாட்சியர் மணிகண்டன், ஒப்பந்ததாரர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory