» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதன் 10, ஏப்ரல் 2024 5:44:52 PM (IST)



நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (10.04.2024) 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதனை வலியுறுத்தி மாணவ மாணவியர்கள் நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், கலந்து கொண்டு பேசுகையில்-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள தேர்தலில் 18 வயது மற்றும் 19 வயது நிரம்பிய முதல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாணவ மாணவியர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நமது மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியர்கள் இங்கு கல்வி பயின்று வருகிறார்கள். 

அனைவரும் கண்டிப்பாக வருகின்ற 19ஆம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதோடு, உங்கள் பெற்றோர்கள், அருகாமையில் உள்ளவர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி வாக்களிக்க வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் பேசினார்கள்.

அதனைத்தொடர்ந்து பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மாணவிகள் வரைந்த வாக்காளர் விழிப்புணர்வு ஓவியத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, பொன்ஜெஸ்லி கல்லூரி முதல்வர் நடராஜன், இயக்குநர் அருள்சன்டேனியல், துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory