» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை ஆட்சியர் ஸ்ரீதர், நேரில் ஆய்வு!

புதன் 10, ஏப்ரல் 2024 4:24:46 PM (IST)



கன்னியாகுமரி தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையின் கண்காணிப்பு அறையை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (10.04.2024) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தேர்தல் பணிகள் நடைபெறுவதை நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்கும் வகையில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிவர்த்தி செய்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்களுக்கான பணி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன்ஒருபகுதியாக சட்டமன்ற தொகுதி வாரியாக வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சுயயேட்சை வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து பணிகளை விரைந்து முடித்திட தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையின் அருகில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு ஒளிப்படக் கருவியினை (கேமரா) பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், கூடுதல் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சாந்தி, கல்குளம் வட்டாட்சியர் முருகன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory