» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விளவங்கோடு இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் : ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு!!

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 3:16:29 PM (IST)



விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று (09.04.2024) விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில் "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், வருகை பதிவேடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் விளவங்கோடு சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள பொருட்களான வாக்காளர் பெயர் பட்டியல், முகவர்களின் கையேடு, ஸ்டிக்கர், உள்ளிட்டவை போதுமானதாக உள்ளனாவா என்பதையும் அலவலர்களிடம் கேட்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேர்தலில் பணிபுரியும் காவலர்கள், வாக்குசாவடி அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கரலிங்கம், உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுப்பையா, கூடுதல் தேர்தல் கண்காணிப்பாளர் வேல் முருகன், விளவங்கோடு வட்டாட்சியர் குமாரவேல், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory