» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தலை முன்னிட்டு மதுக்கடை, பார்களை மூட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 12:09:36 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருகிற 17ம் தேதி முதல் 19ம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தினங்களில் மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024-க்கான வாக்குப்பதிவை முன்னிட்டு 17.04.2024 (புதன்கிழமை) காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வெள்ளிக் கிழமை) நள்ளிரவு 12.00 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 04.06.2024 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தினங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள். அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் (FL2 to FL.11) (Except FL6) அனைத்தும் மூடப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024-க்கான வாக்கு பதிவை முன்னிட்டு 17.04.2024(புதன்கிழமை) காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12.00 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 04.06.2024 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தினங்களில் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

தூத்துக்குடிApr 9, 2024 - 12:23:01 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி 2 ஆம் கேட் அருகில் உள்ள அரசு மதுபான கடையில் பாட்டில் ஒன்றுக்கு ரூ 10 அதிகம் வசூல் கண்டுகொள்ளாத டாஸ்மாக் நிர்வாகம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory