» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பா.ஜ.க.வில் வேட்பாளர்கள் இல்லாததால் தமிழிசை தேர்தலில் நிற்கிறார்‍: கனிமொழி தாக்கு

திங்கள் 8, ஏப்ரல் 2024 4:26:35 PM (IST)



பா.ஜ.க.,வில் வேட்பாளர்கள் இல்லாததால் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கிறார் என்று தி.மு.க., எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

தென் சென்னை தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி திருவான்மியூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது மக்களுக்காக என்று கூறுகிறார்.அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க.,வில் வேட்பாளர்கள் இல்லாததால் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வேட்பாளராக நிற்கிறார். 

சட்டம் போட்டு ஊழல் செய்வது எப்படி என பிரதமர் மோடி உலகத்துக்கே காட்டிய ஊழல்தான் தேர்தல் பத்திரம். திடீரென பிரதமருக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை வந்துள்ளது. இந்தியாவே, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினைதான் பின்பற்றி வருகிறது. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கின்றன. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை ரூ.500 குறைக்கப்படும். பெட்ரோல் விலை குறைக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் 2-வது இடத்தில் அ.தி.மு.க.,தான் வரும். பா.ஜ.க. நோட்டாவுக்கு கீழேதான் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

உண்மApr 9, 2024 - 05:18:46 PM | Posted IP 172.7*****

கனிமொழிக்கு வேற ஊரு , இங்கே வந்து ஓசில MP பதவி கேக்குதா, சொந்த ஊர்ல போட்டியிட வேண்டியது தானே . திமுக ஒரு குடும்ப அரசியல் , கட்டுமரம் பிள்ளைகள் எல்லாம் ஒவ்வொரு ஊரில் ஓசி பதவி

ஏன்Apr 8, 2024 - 04:35:43 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவில் ஆள் இல்லாததால் இவர் தூத்துக்குடியில் போட்டொயிடுகிறாரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory