» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்: புதிய சுற்றுப்பயண விவரம் வெளியீடு!

திங்கள் 8, ஏப்ரல் 2024 12:17:33 PM (IST)

தமிழகத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரப் பயணம் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி நாளையும் (செவ்வாய்க் கிழமையும்), நாளை மறுதினமும் (புதன்கிழமை) என 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டுக்கு அவர் தொடர்ந்து பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, வேலூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதுதொடர்பான சுற்றுப் பயணம் விவரம் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திருத்தப்பட்ட சுற்றுப் பயணம் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, நாளை உத்தரபிரதேசம் மாநில பிலிபிட் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, பிற்பகல் 2.45 மணிக்கு கேரளா மாநிலம் பாலக்காடுவுக்கு செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறார். சென்னையில் ரோட் ஷோவில் பங்கேற்று, பா.ஜனதா சார்பில் போட்டியிடும் தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் செல்வம் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். அதனை முடித்துக் கொண்டு, அன்றைய தினம் இரவு சென்னை கிண்டி ராஜ்பவனில் தங்குகிறார்.

அதற்கு மறுநாள் சென்னையில் இருந்து வேலூருக்கு காலை 10.30 மணிக்கு சென்றடைகிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 1.45 மணிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பா.ஜனதா வேட்பாளரான எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார். அங்கு பிரசாரத்தை முடித்த பின்னர், மராட்டிய மாநிலத்துக்கு மாலை 6 மணிக்கு சென்றடைகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory