» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!!

திங்கள் 8, ஏப்ரல் 2024 10:30:11 AM (IST)

சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின்பேரால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி திருவள்ளூரில் பிரசார பொதுக்கூட்ட மேடையில் அவர் பேசுகையில் "திமுக அறிவித்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய் கூறுகிறார் மு.க. ஸ்டாலின். ஓட்டு அளித்த மக்களுக்கு திமுக என்ன செய்தது.

வேளாண்மை, தொழிற்சாலைகள் அமைந்த பகுதி திருவள்ளூர். நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக கொடுக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை செய்யப்படவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் சரியாக வருவதில்லை. வேலையும் முழுதாகத் தருவதில்லை.

அம்மா இருசக்கர வாகனத் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம், கிராமம் முதல் நகரம் வரை அம்மா மின் கிளினிக் திறக்கப்பட்டது, இவை அனைத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

நீட் தேர்வு குறித்த ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது வெளியிடுவார் எனக் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் ரகசியத்தை உதயநிதி சொல்லவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து குறித்துதான் என உதயநிதி சொன்னார். ஆனால் இதுவரை செய்யவில்லை.

சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலின்பேரால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது திமுக அவர்களுடன் கூட்டணியில் இருந்தது. அப்போது 14 ஆண்டுகளாக தமிழகத்துக்கு திமுக என்ன செய்தது என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory