» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானார் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சனி 6, ஏப்ரல் 2024 11:36:30 AM (IST)

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. 

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரான புகழேந்தி போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனிடம் தோல்வியை தழுவினார். இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை தோற்கடித்து வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். திமுகவில் அனுபவம் மிக்க அரசியல்வாதியாக அறியப்பட்டவர்.

கடந்த சில நாட்களான உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகழேந்தி, நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்காக டிஸ்சார்ஜ் ஆகி வந்தார். பொதுக்கூட்ட மேடையில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.35-க்கு அவர் உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு திமுக தலைவரும் தமிழக முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  புகழேந்திக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், செல்வகுமார் என்ற மகனும். செல்வி, சாந்தி, சுமதி என்ற மகள்களும் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory