» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு விவரத்தை பெறுவதில் மோதல்: மாணவர் உள்பட 2 பேர் கைது!

சனி 6, ஏப்ரல் 2024 8:37:59 AM (IST)

நெல்லையில் மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு விவரத்தை பெறுவதில் ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லையை அடுத்து ஒரு கிராமத்தில் இயங்கிவரும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் சிலரும் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த காட்சியில் பதிவாகி இருந்த அரசு பள்ளி மாணவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியின் செல்போன் ‘இன்ஸ்டாகிராம்' கணக்கை, சக மாணவர்களிடம் மற்றொரு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் கேட்டுள்ளனர். அதை கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவரையும், அதே பள்ளியில் பாதியில் படிப்பை நிறுத்திய மற்றொரு மாணவர் என 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

அடேய்Apr 6, 2024 - 10:45:20 AM | Posted IP 172.7*****

என்ன வயசுடா உங்களுக்கு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory