» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருக்குற்றாலநாதசுவாமி கோயில் சித்திரை விசுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வெள்ளி 5, ஏப்ரல் 2024 12:53:29 PM (IST)



குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில் சித்திரை விசுத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் ஒன்றான சித்திரை விசுத்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.  கொடியேற்றம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலையில் சுவாமி,அம்பாள் வெள்ளி ஏகசிம்மாசனத்திலும், திருக்கோயில் முருகன் மரச்சப்பரத்திலும் சங்கு வீதியுலா நடைபெறுகிறது. விழா நாள்களில் நாள்தோறும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள், திருக்கோயில் முருகன், விநாயகா் வீதியுலா நடைபெறுகிறது. 

விழாவின் 8 ஆம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ஏப்ரல் 9-ஆம் தேதி நான்கு திருத்தேர்கள் பக்தர்களால் வடம்பிடித்தலும், 11 ஆம் தேதி காலை 9.30-க்கும், இரவு 7 மணிக்கும் அருள்மிகு நடராச மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு சித்திரசபையில் அருள்மிகு நடராசமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பச்சைசாத்தி தாண்டவதீபாராதனையும், ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை விசுத்தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory