» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தபால் வாக்குப்பதிவு : ஆட்சியர் தகவல்

வெள்ளி 5, ஏப்ரல் 2024 11:49:16 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டத்தில் தபால் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது என்று  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 39 கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 239 விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து தங்கள் வீடுகளிலேயே தபால் வாக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதி வாரியாக 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்களில் 229 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 3831, 230 நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 2709, 231 குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 2077, 232 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 2438, 233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 1651, 234 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 1501 என மொத்தம் 14,207 வாக்காளர்களுக்கு படிவம் 12 D வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் 229 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 2671, 230 நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 1637, 231 குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 2496, 232 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 1718, 233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 1557, 234 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 2216 என மொத்தம் 12,295 வாக்காளர்களுக்கு படிவம் 12 D வழங்கப்பட்டுள்ளது.

படிவம் 12 D வழங்கப்பட்ட தகுதியான வாக்காளர்களில் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்களில் 229 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 1343, 230 நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 559, 231 குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 448, 232 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 849, 233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 510, 234 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 273 என மொத்தம் 3982 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்காக பதிவுசெய்யவுள்ளார்கள்.

மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் 229 கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 725, 230 நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 293, 231 குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 388, 232 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 548, 233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 335, 234 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தகுதிபெற்ற வாக்காளர்கள் 257 என மொத்தம் 2546 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தபால் வாக்காக பதிவுசெய்யவுள்ளார்கள்.

85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 8 மற்றும் 9ம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 12 மற்றும் 13ம் தேதியும் தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் வாக்குப்பெட்டிகளை அன்றே முத்திரையிட்டு வட்டாட்சியர் அலுவலங்களில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கபடும். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்கள்.

நடைபெற்ற கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கு.சுகிதா (பொது), செந்தூர் ராஜன் (தேர்தல்), உதவி தேர்தல் அலுவலர்கள் செல்வி.எஸ்.காளீஸ்வரி, தமிழரசி, லொரைட்டா, சுப்பையா, கனகராஜ், சுப்புலெட்சுமி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள் சேக் அப்துல் காதர், சிவகாமி, சாந்தி, தனி வட்டாட்சியர் கண்ணன், தேர்தல் வட்டாட்சியர் வினோத், உதவி தேர்தல் வட்டாட்சியர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory