» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் நாட்டின் கடைசி தேர்தல்: கனிமொழி பிரசாரம்

வியாழன் 4, ஏப்ரல் 2024 3:50:34 PM (IST)



பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும்  என்று தி.மு.க எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.

மதுரையில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. தமிழ்நாட்டை மதிப்பது கிடையாது. தமிழ்நாடு மழை,வெள்ளத்தால் பாதித்தாலும் எந்த நிவாரணமும் வராது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து பெயர் மாற்றமே செய்து விட்டது. இதை பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவது கிடையாது. இதை பற்றி நாம் பேசினால் 'நக்சல்' என்பார்கள், ரெய்டு நடத்துவார்கள். இந்த தேர்தல் இன்னொரு சுதந்திர போராட்டம் என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் கேட்டால் தரமுடியாது என்கிறார்கள். ஆனால் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்கிறார்கள். ரூ 65 ஆயிரம் கோடிக்கு மேல் கார்ப்ரேட் நிறுவன கடனை ரத்து செய்துள்ளார்கள். ஆனால் விவசாயிகள் கடனை ரத்து செய்யச்சொன்னால் கேட்க மாட்டார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டால் பக்கோடா போடச் சொல்கிறார்கள். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும். தன்னை கர்நாடகாகாரன் எனக்கூறிய அண்ணாமலை தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார்.


மக்கள் கருத்து

peopleApr 5, 2024 - 10:23:50 PM | Posted IP 172.7*****

All Peoples vote for DMK

இந்தியன்Apr 5, 2024 - 12:02:20 PM | Posted IP 172.7*****

எங்கள் ஓட்டு அண்ணாமலைக்கே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory