» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

வியாழன் 4, ஏப்ரல் 2024 12:24:09 PM (IST)

பள்ளி வாகனங்களில் ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி பள்ளி வாகனங்களுக்கான நெறிமுறைகள் பின்வருமாறு, பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன டிரைவர்களை நியமிக்க வேண்டும். டிரைவர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும்.

டிரைவர் மற்றும் உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும். போக்சோ சட்ட விதிகள் பற்றி டிரைவர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பள்ளி வாகனங்களில் டிரைவர் மற்றும் உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory