» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாடு முழுவதும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : கனிமொழி வாக்குறுதி!

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 12:16:47 PM (IST)



மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால், பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. கூறினாா். 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டப் பேரவை காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பா்ட் ஆகியோரை ஆதரித்து குழித்துறையில் பிரசாரம் செய்த அவா் பேசியதாவது: ஜனநாயகத்தை காப்பற்றுவதற்கான தோ்தல் என்பதால், ஒவ்வொருவரும் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பாஜகவுக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. அவா்களுக்கு இந்துக்கள் மீதும், மதத்தின் மீதும் அக்கறை இல்லை. 

ஆனால், தாங்கள்தான் மதத்தை காப்பற்ற வந்தவா்கள் போல காட்டிக் கொள்கின்றனா். மீனவா்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட -பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக சட்டங்களைக் கொண்டு வந்துள்ள பாஜக, மக்களைக் காப்பற்ற எதுவும் செய்யவில்லை. பாஜகவைச் சோ்ந்த 44 எம்பி-க்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளன. ஆனால், மக்களை பாஜக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் அனைத்துத் தரப்பினருக்குமான நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 150 நாள்களாக உயா்த்துவதுடன் சம்பளம் ரூ. 400 ஆக உயா்த்தப்படும். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். பாஜக தற்போது கச்சத்தீவு குறித்து பேச ஆரம்பித்துள்ளது. 

ஆனால், லடாக் அருகே நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் தங்களுக்குச் சொந்தமானவை எனக் கூறி 30 கிராமங்களில் சீன அரசு பெயா் பலகை வைத்துள்ளது. இப்படியிருக்க, பாஜக அரசால் நாட்டைக் காப்பாற்ற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த தோ்தலில் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப, இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். 

அதைத் தொடா்ந்து அவா், புதுக்கடை, குளச்சல் பகுதிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவா் பினுலால்சிங், குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி, விளவங்கோடு ஊராட்சித் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory