» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசியில் 100 சதவீதம் வாக்குப் பதிவு விழிப்புணர்வு: திருநங்கைகள் பங்கேற்பு

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 12:05:32 PM (IST)


தென்காசியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 105 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி திருநங்கைகள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்; தலைமையில் நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தில் அனைத்து மக்களும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 

தேர்தல் விழிப்புணர்வு பேரணி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம், இருசக்கர வாகன பேரணி, முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கான விழிப்புணர்வு முகாம், மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கான மாபெரும் கையெழுத்து இயக்கம், மாற்றுத்திறனாளிக்கான தேர்தல் விழிப்புணர்வு முகாம், ராட்சத ஹீலியம் பலூன் பறக்க விடுதல், சிறு குறு நடுத்தர வர்த்தக நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரதிகள் விநியோகித்தல், ஸ்டிக்கர் ஒட்டுதல், கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவு உள்ள வாக்குச் சாவடிகளில் சிறப்பு தேர்தல் விழிப்புணர்வு முகாம்கள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மகளிர் திட்ட இயக்குநர் இரா. மதி இந்திரா ப்ரியதர்ஷினி, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிலையில் தென்காசியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் பங்கேற்றவர்கள் அனைவரும் "தேர்தல் திருவிழா - தேசத்தின் பெருவி விழா” "என் வாக்கு என் உரிமை”,"என் வாக்கு விற்பனைக்கு அல்ல”"வாக்களிப்பது நமது கடமை”"100% நேர்மையாக வாக்களியுங்கள்”"வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்” போன்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை கூறினார்கள். திருநங்கையர் அனைவரும் திருநங்கைகளுக்கான குறியீட்டில் அணிவகுத்து நின்று தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த முகாமில் 105 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஏ.ஆ.சிவக்குமார், .டேவிட் ஜெயசிங், மாரீஸ்வரன், கலைச்செல்வி, பிரபாகர், .சாமத்துரை, சமூக நலத்துறை அலுவலர்கள் புஷ்பராஜ், கேப்ரியேல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சமுதாய அமைப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory