» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவிலில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் : ஏப்.2ம் தேதி தொடக்கம்!!

திங்கள் 1, ஏப்ரல் 2024 3:53:26 PM (IST)

நாகர்கோவிலில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஏப்.2 முதல் ஜூன் 26 வரை ஆறு கட்டங்களாக அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் வைத்து நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கன்னியாகுமரி மாவட்ட பிரிவு சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக 02.04.2024 முதல் 26.06.2024 வரை ஆறு கட்டங்களாக நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கும் என தனித்தனியே நடத்தப்படவுள்ளது.

முதல் கட்டம்: 02.04.2024 - 14.04.2024 விடுமுறை நாட்கள் 08.04.2024

இரண்டாம் கட்டம்: 16.04.2024 – 30.04.2024 விடுமுறை நாட்கள் 19, 22, 29.04.2024

மூன்றாம் கட்டம்: 02.05.2024 – 15.05.2024 விடுமுறை நாட்கள் 06, 13.05.2024

நான்காம் கட்டம்: 16.05.2024 – 29.05.2024 விடுமுறை நாட்கள் 20, 27.05.2024

ஐந்தாம் கட்டம்: 30.05.2024 – 12.06.2024 விடுமுறை நாட்கள் 03, 10.06.2024

ஆறாம் கட்டம்: 13.06.2024 – 26.06.2024 விடுமுறை நாட்கள் 17, 24.06.2024

இப்பயிற்சி முகாமானது காலை 6-7, 7-8,; 8-9 மணி மற்றும் மாலை 4-5, 5-6 மணிவரை சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கும் காலை 11-12 மணிக்கு மட்டும் பெண்களுக்கு என தனித்தனியே நடத்தப்படவுள்ளது. நீச்சல் பயிற்சி முகாமின் அம்சங்கள் நீச்சல் தெரியாதவர்களுக்கான நீச்சல் பயிற்சி, நீச்சல் தெரிந்தவர்களுக்கான சிறப்பு நீச்சல் பயிற்சி, உடல் எடை குறைவதற்கான நீச்சல் பயிற்சி என தனித்தனியே பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கட்டணமாக சரக்கு மற்றும் சேவை வரியுடன் ரூ. 1770/- ஆகும். 

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது கட்டணத்தினை கடன் அட்டை (Credit card) பற்று அட்டை (Debit card) அல்லது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் ஆன்லைன் பண பரிமாற்றம் செய்யவும், மற்றும் ஆதார் அட்டையினை கொண்டு வர வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 04652 – 262060, 99948 51769, 74017 03507 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory