» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜா எம்.எல்.ஏ., காரை சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட்

திங்கள் 1, ஏப்ரல் 2024 3:06:18 PM (IST)

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முழுமையாக சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா புளியங்குடி சாலையில் காரில் சென்ற போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராதா தலைமையிலான குழுவினர் தடுத்து நிறுத்தினர். அக் காரை பறக்கும் படையினர் முழுமையாக சோதனை செய்யாமல் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எதிர் கட்சிகளின் நிர்வாகிகள், வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கமல் கிஷோருக்கு புகார் மனுக்களை அனுப்பினர்.

இதையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நடத்திய விசாரணையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் காரை முழுமையாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்யாதது தெரிய வந்தது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் வட்டார வளர்ச்சி அலுவலருமான ராதாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory