» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: மத்திய அரசு உத்தரவு

திங்கள் 1, ஏப்ரல் 2024 10:49:11 AM (IST)

தமிழ்நாட்டில் இன்று அமல்படுத்துவதாக இருந்த சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது. அதன்படி நிகழாண்டு சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட இருந்தது. ஆனால் இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று அமல்படுத்துவதாக இருந்த சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இதேபோல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory