» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி, விசிக.,வுக்கு பானை சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

சனி 30, மார்ச் 2024 5:42:38 PM (IST)

மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி சின்னத்தையும், விசிக.,வுக்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் வைகோ மகன் துரை போட்டியிடுகிறார். தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி, வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், ஒரே மாநிலத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே, முன்பு ஒதுக்கீடு செய்த சின்னத்தை தர முடியும். பம்பரம் பொதுச்சின்னமாக அறிவிக்கவில்லை. அதை ஒருவருக்கும் ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து புதிய சின்னத்தை தேடும் பணியில் ம.தி.மு.க., ஈடுபட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க.,வுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, சின்னத்துடன் திருச்சியில் மதிமுக.,வினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசிக.,வுக்கு பானை சின்னம்

மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. பானை சின்னம் ஒதுக்கீடு செய்ததற்கான, ஆணையை தேர்தல் அலுவலரிடம் இருந்து திருமாவளவன் பெற்றுக் கொண்டார். கடந்த 2019ம் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவனுக்கு மீண்டும் அதோ சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory