» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்.திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் பாஜக வேலை: கனிமொழி பேச்சு!!

வியாழன் 28, மார்ச் 2024 4:04:09 PM (IST)



காங்கிரஸ் திட்டங்களுக்கு பெயர் மாற்றி, ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் மத்திய பாஜக அரசின் வேலை என்று கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேசினார். 

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இந்தியா கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரித்தார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கிருஷ்ணராயபுரம் கடைவீதி, வெங்கமேடு அண்ணா சிலை அருகில், க.பரமத்தி கடைவீதி ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து,கை சின்னத்திற்கு வாக்கு அளிக்கப் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்க கூடியவர் ஜோதிமணி அவர்கள், மக்கள் பிரச்சனை என்றால் நாடாளுமன்ற குரல் எழுப்புவர், பின் அதற்காக இடை நீக்கம் செய்யப்படுவார், அதிகம் இடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர். இந்த தேர்தல் என்பது வெறும் அரசியல் வெற்றிக்கான தேர்தல் இல்லை இந்த நாட்டை மீட்டெடுக்கக் கூடிய தேர்தல் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

மத்திய மோடி ஆட்சி இன்றைக்கு இந்த நாட்டை சிதைத்துக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து, மத ரீதியாக, சாதி ரீதியாக மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தி அரசியல் செய்கிறார்கள். அந்த சண்டையில் வரக்கூடிய ஆபத்தான அரசியலை வைத்து ஓட்டு வாங்கி ஜெயித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

மணிப்பூரில் இன்னும் பிரச்சனை சீராகவில்லை, மக்கள் இன்னும் நிவாரண முகாம்களில் தான் உள்ளனர், முகாம்களில் குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறார்கள். பெரியவர்களுக்கு மருந்து மாத்திரை கிடைக்கவில்லை, சாப்பாடு கிடையாது என்ற பயத்தோடு அங்கே மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தனர். இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர், அங்கே அவமானப்படுத்தப்பட்டு பாலியல் கொடூரங்களுக்கு ஆளாக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு மேல அந்த பெண்களை அவதிப்படும், ஒரு நிலையை நாம் பார்த்தோம். இதுவரை அங்கு சென்று மக்களை பிரதமர் சந்திக்கவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் நங்கள் அங்கே இருக்கக்கூடிய மக்களை சந்தித்து இருக்கிறோம். 

புயல் வெள்ளத்தினால் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போது வந்து பார்க்காத பிரதமர் மோடி, மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் வந்து எட்டிப் பார்க்காத பிரதமர். தேர்தல் என்று வந்தால் 10 நாட்கள் இங்கு தான் இருந்தார்.

காங்கிரஸ், திமுக கூட்டணி மத்தியத்தில் இருந்த போது, 100 நாட்கள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இவர்கள் 100 நாள் திட்டம் மக்களுக்கு 30 நாட்கள் கூட வேலை கிடைக்கவில்லை. பணத்தில் மிதந்து கொண்டு இருக்கும் கார்ப்பெட் நிறுவனத்திற்கு 68,607 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளனர், ஆனால் 100 நாட்கள் வேலை திட்டத்தில் மூலம் மக்களுக்கு வேலை வழங்க நிதி இல்லையாம்.

அடிப்படை அதர விலை வேண்டி விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, அவர்களை ட்ரோன், ஆயுதம் கொண்டு தாக்கினர். பாலியல் குற்றங்களுக்கு உள்ளான 44 பேர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், பிரிஜ் பூசன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மீது மல்யுத்த வீராங்கனை பாலியில் வன்கொடுமை புகார் அளித்து, போராட்டம் நடத்தினர். அந்த வீரர் வீராங்கனை காவல்துறை என்ன செய்து என்று நாம் அனைவருக்கும் தெரியும்.

ஒருவருக்கு ஜாமின் என்பது அடிப்படையான ஒன்று, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இத்தனை மாதம் ஆகியும் ஜாமின் வழங்க வில்லை. இந்தியாவில் 2 முதலமைச்சர்கள் அலமக்கத்துறையினரால் மத்திய அரசு கைது செய்துள்ளது. 90 சதவீத அமலாக்கத்துறை எதிர்கட்சியினர் மீது தான் வழக்குப் போட்டுள்ளனர்.

100 பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்புகள், 355 கோடியில் நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள்,  587 கோடியில் மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டம், மற்றும் ஜவுளி உற்பத்தி பொருட்கள் மேம்பாட்டு அலை உள்ளிட்ட பல திட்டங்களை ஜோதிமணி அவர்கள் கொண்டு வந்துள்ளார் 

மத்தியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், சமையல் கேஸ் 500 ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் 75, டீசல் 65  ரூபாய் விற்பனை செய்யப்படும். 100 நாட்கள் வேலைத் திட்டம் , 150 நாட்களாக மாற்றப்படும், வேலை நாள் சம்பளம் 400 ரூபாய் வழங்கப்படும் என்று நாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார், மேலும் காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஜிஎஸ்டி வரியால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன, இங்கு அதிகமாக நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், போன்றவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன, காலதாமதமான வரி செலுத்துதல், அதிக வரி விதிப்பு போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்க கூடியவர் ஜோதிமணி. மக்கள் பிரச்சனை என்றால் நாடாளுமன்ற குரல் எழுப்புவர், பின் அதற்காக இடை நீக்கம் செய்யப்படுவார், அதிகம் இடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.

கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி அவர்கள் மீது பாஜகவினருக்கு பயம், அவர் உடல் நிலை சரியில்லை என்ற போதும் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. கரூர்  அண்ணாமலை பயத்தால் தொகுதி மாற்றி விட்டார்.

அண்ணாமலை இதுவரை 20,000 மேற்பட்ட புத்தகங்கள் படித்து உள்ளாராம், கடந்த முறை அவருக்கு தெரிந்த கோவில்பட்டியை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரலட்சுமி பற்றி கூறினார், கோவில்பட்டி எனது தொகுதி, அவர் சொன்ன கோவில்பட்டி வீரலட்சுமி 1961ஆம் ஆண்டு தான் பிறந்திருந்தார், அப்படி இருக்கும் பொழுது எப்படி அவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றிருக்க முடியும். யாரையும் பற்றி விமர்சனம் செய்யும் தகுதி அண்ணாமலைக்கு கிடையாது.

தலைவர் கொடுத்த தொலைக்காட்சி இன்னும் ஓடுகிறது, ஆனால் அவர்கள் கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் ஓடியே விட்டது. பசி பட்டினி உள்ள நாடுகளில் இந்தியா (Global hunger index) அதில் பார்த்தால் 111வது இடம். தமக்கு மேலே நேபால், பங்களாதேஷ், பாகிஸ்தான் இருக்கிறது. நமக்கு குறைவாக பசி பட்டினியாக உள்ளவர்கள் நாடாக பாகிஸ்தான் உள்ளது.

நம் தலைவர் கலைஞர் அவர்கள் யாரும் பசி பட்டினியுடன் இருக்கக் கூடாது என்று ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டத்தை கொண்டு வந்தார், பள்ளி செல்லும் குழந்தைகள் காலையில் பசியுடன் இருக்கக் கூடாது என்று காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார் நாம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கரூர் மாவட்டத்தில் ஜிஎஸ்டி வரியால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன, இங்கு அதிகமாக நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், போன்றவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன, காலதாமதமான வரி செலுத்துதல், அதிக வரி விதிப்பு போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

குடியுரிமை சட்ட பாஜக கொண்டு வந்த போது அதற்கு ஆதரவாக வாக்கு அளித்து அதிமுக, அவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றது அதிமுக. அதிமுக சின்ன ஸ்டிக்கர், பாஜக பெரிய ஸ்டிக்கர், அதிமுக எந்த பொருளாக இருந்தாலும் ஸ்டிக்கர் ஒட்டி தான் வரும். இந்திரா காந்தி அவர்கள் ஆட்சி காலத்தில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் பெயர் மாற்றி, அந்த திட்டங்களை அவர்களே கொண்டு வந்து போல காட்டி கொள்கின்றனர்.

1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்திராகாந்தி வீடு வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா இதை படிப்பதற்குள் தலை சுற்றுகிறது, அப்படி இருக்கும் பொழுது இதை எப்படி புரிந்து கொள்வது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு 72000 மட்டுமே வழங்குகிறது ஆனால் தமிழ்நாடு அரசு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. ஆனால் இதற்கு பெயர் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டம் என்ற பெயரில் இது இருந்திருக்க வேண்டும்.

பெண் பிள்ளைகளை பாதுகாக்கும் திட்டம் 2008 இல் கொண்டுவரப்பட்டது, இப்பொழுது அந்த திட்டத்திற்கு பெயர் மாற்றியுள்ளனர் பேட்டி பச்சா, பேட்டி படாவோ யோஜனா. மகாராஷ்டிராவில் 15 ஆயிரம் கிமீ தேசிய  நெடுஞ்சாலைகள் உள்ளன,ஆனால் அங்கு 44 சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளது, தமிழ்நாட்டில் 5,000 கிமீ தொலைவிற்கு தேசிய  நெடுஞ்சாலை உள்ளன, ஆனால் இங்கு 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. இன்னும் 20 சுங்கச்சாவடிகள் கொண்டு வர உள்ளனர்.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன் சுங்கச்சாவடிகளை இழுத்து மூடி விட்டு வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்ல உள்ளோம். விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்றும் மாணவர்களுக்கான கல்வி கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறும் பாஜக. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்துள்ளனர். நாம் ஒரு ரூபாய் வரி பணம் கொடுத்தோம் என்றால், 26 பைசா தான் திருப்பி தருகிறார்கள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்று கூறிய மோடி, தற்போது பக்கோடா போடுங்கள் என கூறுகிறார். இந்த தேர்தலில் நாடும் நமதே நாற்பதும் நமதே, இந்த தொகுதியில் திமுகவிற்கும் கைதான், காங்கிரசும் கைதான், இதற்கு வாக்களித்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory