» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேனியில் டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல்: வாகனத்திற்கு அனுமதி மறுப்பால் பரபரப்பு!

புதன் 27, மார்ச் 2024 7:37:06 PM (IST)



தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இடம் பெற்றுள்ள டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடுகிறார். தேனியில் மனு தாக்கல் செய்ய வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை வாகனத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் அவரது வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, அமமுக தொண்டர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தொண்டர்களைச் சமாதானப்படுத்தி தினகரன் வாகனத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளித்தனர். இதன்பின்னர், தேனியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory