» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி: வாழ்த்துக்கள் குவிகிறது!!!

செவ்வாய் 26, மார்ச் 2024 9:56:09 AM (IST)



அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் காசி விஸ்வநாதர் கோயிலில் சேர மன்னர் காலக் கல்வெட்டை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவி‌ கண்டுபிடித்துள்ளார். 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தொல்லியல் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வரும் மாணவி மீனா. இவர் தன் தாய் லட்சுமி அவர்களுடன் நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றுள்ளார். அந்த கோயிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தின் அதிட்டானப் பகுதியின் பட்டிக்குக் கீழே ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். பின்னர் அதனைப் படி எடுத்து வாசித்துள்ளார். 

முதல் வரியில் "சேர" என்ற வார்த்தையும் இரண்டாவது வரியில் "மொழிந்தருளி" என்றும்; அடுத்த வரியில் "விளக்குச் செல்வதாக' எனவும்; நான்காவது வரியில் "இவ்வூர் நாலஞ்சேரி" எனவும்; கடையில் வரியில்"இவ்வூர்" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.

இதனைப் படித்த பேராசிரியர் முருகன் மற்றும் மதிவாணன் "இந்தக் கல்வெட்டின் முழுத் தகவலும் கிடைக்கவில்லை எனவும், இக்கல்வெட்டு இடைக்காலத் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டுள்ளன எனவும், முதல் இரண்டு வரிகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில் "கொடை அளிக்கும் முன்பு அரசரால் நேரடியாக ஆணையிடப்பட்டதையும், மூன்று மற்றும் நான்காவது வரிகளின் மூலமாக "நான்கு சேரிகள் உள்ளதையும் இந்தக் கல்வெட்டு தெரியப்படுத்துகிறது" என்றனர். இந்த கல்வெட்டு சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த மண்டபத்திற்கு சற்று தூரத்தில் இருக்கும் கார்த்திகை மடத்தின் வலது புற சுவரில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மாணவி மீனா படியெடுத்து வாசித்தபோது இந்த கல்வெட்டு தலைகீழாக இருந்ததையும், இந்த கல்வெட்டு முழுமையானது இல்லை எனவும், இது ஒரு கல்வெட்டின் கடைசிப் பகுதி எனவும் கண்டறிந்தாள். 

இந்த கல்வெட்டு ஒரு தானம் வழங்கியதை விளக்குகிறது. கல்வெட்டு முழுமையாக கிடைக்காததால் அது என்ன தானம் எனத் தெரியவில்லை. ஆனால் தானத்தை உறுதி செய்ய கையொப்பமிட்டவர்களின் பெயர்கள் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. 

அதில் கீட் செம்பி (இராமநாதபுரம்) நாட்டை சேர்ந்தவருமான வேளர் தேவதானமான னுளம்பாதராசன் அவருடைய கையொப்பமும், மலைப்பார் நாட்டில் உள்ள இடையாற்றூரைச் சேர்ந்தவரும், அவயம்புக்கார் நந்தி அரசன் என்பவனுடைய பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மேற்குறிப்பிடப்பட்ட தானத்திற்கு கையொப்பம் இட்டவர்கள் ஆவார்கள். மலைப்பார் நாடு என்றால் அது சேரநாட்டையே குறிக்கும். எழுத்தின் வரி வடிவைக் கொண்டு இந்த கல்வெட்டு சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என பேராசியர்கள் தெரிவித்தனர். 

சேர மன்னர்களின் கல்வெட்டு பாண்டிய நாட்டில் அரிதாகவே கிடைக்கின்றன. எனவே இந்தக் கல்வெட்டு வரலாறு முக்கியத்துவமானது என பேராசியர்கள் தெரிவித்தனர்.   இந்த கல்வெட்டு மடத்தின் சுவற்றில் தலைகீழாகப் பொருத்தப் பட்டுள்ளது. அதாவது கல்வெட்டு பதிக்கப்பட்ட பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்கப்பட்டுள்ளது. மண்டபங்கள் அழகாக வடிவமைக்கப்பட்ட கருங்கல் தூண்களைக் கட்டப்பட்டவை.‌ 

ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்த மண்டங்களை முழுவதும் பிரித்து எடுத்து அதே கற் தூண்களைக் கொண்டு வேறு வடிவத்தில் மண்டபத்தை கட்டியுள்ளனர்.  அதனால் இந்த கல்வெட்டும் தனித் தனியாக பிரித்து எடுத்து ஆங்காங்கே இந்த மடத்தில் பொருத்தியுள்ளனர். அந்த மண்டபத்தின் பிற பகுதியில் கல்வெட்டின் எழுத்துக்கள் கட்டத்தின் உள்பக்கம் இருக்குமாறு பொருத்தியிருக்கலாம். இதனால் அவைகளை பார்க்க முடியவில்லை. 

இந்த கட்டடக்கலை அமைப்பின் படி இந்த மண்டபம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது என பேராசிரியர்கள் தெரிவித்தார்கள். இந்த மாணவிக்கு பேராசிரியர் சி.சுதாகர் தொல்லியல் துறை தலைவர் (பொறுப்பு) மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

G PRAVINAMar 30, 2024 - 02:53:56 AM | Posted IP 162.1*****

Super

K. Satheesh Kumar, Advocate, DenkanikottaiMar 28, 2024 - 09:56:32 AM | Posted IP 172.7*****

Congratulations History subject is to be added in the school syallabus. Interested students will study. Opportunity for studying History should not be denied.

பி.இப்ராகிம் தாரிக்Mar 27, 2024 - 10:58:06 PM | Posted IP 162.1*****

தமிழ் மாணாக்கர்கள் பலபேர் தொல்லியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று-ஆராய்ச்சி செய்து,சேர&சோழ&பாண்டியர்களின் பழம்பெருமை வரலாற்றை தோண்டி எடுத்து,தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும்.இதற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்!

முனைவர் காளிதாஸ் கல்வெட்டுஆய்வாளர் புதுக்கோட்டைMar 27, 2024 - 10:02:38 PM | Posted IP 162.1*****

வணக்கம் தங்கள் ஆய்வுப் பணி சிறக்க வாழ்த்துக்கள். மலைப்பார் நாடு என்பது கேரளா நாட்டின் மலபார் ஆகும். சேர நாட்டில் முக்கிய நகரமாகும் . நன்றி

ஆ.சுகுமாரசுவாமி.Mar 27, 2024 - 08:22:59 AM | Posted IP 172.7*****

வாழ்த்துக்கள் மகளே! இன்னும் பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட ஏதாவது சிறப்பாக நாம் செய்ய வேண்டும்.

Dr. Mani priyaMar 27, 2024 - 08:03:23 AM | Posted IP 162.1*****

Congratulations

கனிமொழிMar 27, 2024 - 08:01:57 AM | Posted IP 162.1*****

வாழ்த்துகள். புதியதாக சேரர்கால கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியதற்கு நன்றி. கல்வெட்டு படித்தாலே தனி சிறப்பு தான். இன்னும் உங்கள் களபணி தொடரட்டும்.... உங்களுக்கும், உங்கள் பூற்றோர்களுக்கும், உங்கள் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.

Dr S PalaniMar 27, 2024 - 05:04:27 AM | Posted IP 172.7*****

Congratulations Meena Govt should come forward give a project for her to continue her research Dr S Palani Former Reader Department of Library and Information Science

Dr.A. Chandran.Mar 26, 2024 - 10:12:02 PM | Posted IP 162.1*****

Congratulations to selvi.Meena. Great work indeed, inspite of the inscription being upside-down She has managed to decipher crucial information which is exactly the purpose behind stone inscriptions Govt should encourage her efforts and delve into more facts God bless Meena with more such credits

மாரியம்மாள் ஆசிரியைMar 26, 2024 - 06:30:56 PM | Posted IP 162.1*****

என் மாணவி எனக் கூறுவதில் பெருமை👍அடைகிறேன்.

பெ. முருகன்Mar 26, 2024 - 12:21:42 PM | Posted IP 172.7*****

சிறப்பு.சேரர்காலம் கல்வெட்டு கண்டுபிடிப்பு பாராட்டுகள். மீண்டும் அதே இடத்திற்கு சென்று முழு தகவல்கள் சேகரிக்க கள ஆய்வுகள் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory