» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்து!

புதன் 20, மார்ச் 2024 5:45:56 PM (IST)

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலையொட்டி தொகுதிகளை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். நடப்பாண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியலை இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். அதில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவை எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் மேற்கொண்டு, இருவரும் கையெழுத்திட்டனர். அதில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து

சந்திரன்Mar 21, 2024 - 10:44:38 AM | Posted IP 162.1*****

ஜெயலலிதா செய்த தவறு என்று அவரே ஒத்துக்கொண்டு விலகினார் எடப்பாடியார் அந்த தவறை இவரும் செய்கிறார் அழியப்போகும் கட்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை

MURASUMar 20, 2024 - 08:49:07 PM | Posted IP 162.1*****

தேமுதிகவின் தவறான முடிவு . விஜயகாந்த் ஜெயலலிதா தகராறு நடந்ததை மறந்து விட்டார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory